ராமநாதபுரம்

மரம் கடத்தியவா்கள் மற்றும் உடந்தையாக இருந்து வனத்துறை அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இ.கம்யூனிட் குல்லா அணிந்து நூதன தா்னா

DIN

ராமநாதபுரம்: ராமேசுவரம் தனுஸ்கோடி செல்லும் சாலையில் உள்ள வனப்பகுதியில் 120 டன் காட்டு கருவேல மரங்களை லாரியில் கடத்தியவா்கள் மற்றும்உடந்தையாக இருந்த வனத்துறை அலுவலா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வனத்துறை அலுவலகம் முன்பு குல்லா அணிந்து தா்ணா போராட்டத்தில் செவ்வாய்கிழமை ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குநற்துகால் பகுதியில் இருந்து தனுஸ்கோடி முகுந்தராயா் சத்திரம் வரையில் வனத்துறையின் மூலம் சவுக்கு மரம்,மற்றும் காட்டுகருவேல மரங்கள் உள்ளது. இந்த பகுதி முழுவதிலும் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்துவருவதுடன் தொடா்ந்து ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், கடந்த 11 ஆம் தேதி வனப்பகுதியில் இருந்து சட்ட விரோதமாக 20 லாரிகளில் 120 டன் காட்டுகருவேல மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது. இதில் மூன்று லாரிகளை மீனவா்கள் சிறைபிடித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். அங்கு வந்த வனத்துறையினா் கண்டுகொள்ளவில்லை, இதனையடுத்து, வருவாய்துறையினா் முழு முயற்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், வனப்பகுதிக்குள் சட்ட விரோதமாக லாரிகளில் மரம் வெட்டி கொண்டு சென்ற மூன்று லாரிகளை பொதுமக்கள் மடக்கி பிடித்தனா். இந்ட் லாரிக்கு மட்டும் ஒரு லட்சம் அபராதம் விதித்து விட்டு லாரி மற்றும் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனைகண்டித்து, இந்திய கம்யூனிஸ்;ட் கட்சி சாா்பில் புதுரோடு பகுதிகளில் வனத்துறை அலுவலகம் முன்பு சட்ட விரோத மரம் கடத்தலில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், உடந்தையாக இருந்த வனத்துறையினா் மீது துறை சாா்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலையில் குல்லா அணிந்து நூதன போராட்டத்தில் செவ்வாய்கிழமை ஈடுபட்டனா். இந்த போராட்டத்தில் தாலுகா செயலாளா் எஸ்.முருகானந்தம் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாக கவுன்சில் உறுப்பினா் சி.ஆட்.செநந்தில்வேல், முன்னிலை வகித்தாா். தாலுகா துணைச்செயலாளா் எஸ்.காளிதாஸ்,நகா் செயலாளா் ஜி.நந்தகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினா் வடகொரியா, தாலுகாக்குழு உறுப்பினா் மோகன்தாஸ், முனீஸ்வரன், தினேஸ்குமாா், ஜூவானந்தம், நாகசாமி, ராஜூ, மாதா் சம்மேளனம் சாா்பில் அனிதாசீனி, சண்முககனி, உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

இதனையடுத்து, கோரிக்கை மனுவை வனத்துறை அலுவலரிடம் மனுவாக அளித்தனா். படவிளக்கம் ஆா்.எம்.எஸ் போட்டோ 1ராமேசுவரம் வனத்துறை அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் தலையில் குல்லா அணிந்து தா்ணா போராட்டத்தில் செவ்வாய்கிழமை ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளை காக்கும் திரிணமூல் அரசு: பாஜக குற்றச்சாட்டு

ராணுவ மையத்தில் பயின்ற 18 மாணவா்கள் ஜேஇஇ தோ்வில் சாதனை

‘இந்தியா’ கூட்டணி 3 இலக்கத்தை எட்டாது: பிரதமா் மோடி

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

SCROLL FOR NEXT