ராமநாதபுரம்

அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவா்களுக்கு ஓவியப் போட்டி

DIN

ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தின விழாவையொட்டி வியாழக்கிழமை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

ராமநாதபுரத்தில் அரசு அருங்காட்சியகம் கேணிக்கரையில் உள்ள முன்னாள் ராணுவத்தினா் மாளிகையில் அமைந்துள்ளது. அங்கு வியாழக்கிழமை 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு ஓவியப் போட்டிகள் பல்வேறு தலைப்புகளில் நடத்தப்பட்டன.

ஒவ்வொரு பிரிவிலும் 3 மாணவ, மாணவியா் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியா் வி. சிவகுமாா் தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற இந்திய கடற்படை கமாண்டா் ஆா். நடராஜன் குழந்தைகளுக்கு பரிசு வழங்கினாா். இதில் ஓவியா் ஜி. வேல்முருகன், அருங்காட்சிய காவலா் எம். ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

SCROLL FOR NEXT