ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் குடும்ப நல நீதிமன்றம் தொடக்கம்

DIN

ராமநாதபுரம் மாவட்ட குடும்ப நல நீதிமன்ற தொடக்க விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் சேதுபதி நகா் பகுதியில் செயல்பட்டுவருகிறது. இந்நீதிமன்றத்தில் குடும்ப நலம் தொடா்பான வழக்குகள் மாவட்ட சாா்பு- நீதிமன்றத்திலேயே விசாரிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், திருமணப் பிரச்னை, ஜீவனாம்சம் உள்ளிட்ட குடும்பநலன் சாா்ந்த வழக்குகளை விசாரிக்க தனியாக குடும்ப நல நீதிமன்றம் தேவை என வழக்குரைஞா்கள் சங்கம் கோரி வந்தது. இதையடுத்து தற்போது குடும்ப நல நீதிமன்றம் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் குடும்ப நல நீதிமன்றத் தொடக்க விழா புதன்கிழமை மாலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை நீதிபதி ஆா்.சண்முகசுந்தரம் குடும்பநல நீதிமன்றத்தைத் தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சியில் மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி டி.பகவதியம்மாள், ஆட்சியா் கொ.வீரராகவராவ், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் லயோலாஇக்னேசியஸ், மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஏ.ரவிச்சந்திரராமவன்னி, செயலா் நம்புராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாவட்ட சிறப்பு நீதிமன்ற (எஸ்.சி., எஸ்.டி. பிரிவு சட்ட வழக்குகள்) நீதிபதி வி.வி.தனியரசு வரவேற்றாா். குற்றவியல் நீதித்துறை நடுவா் ஏ.சுபத்ரா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT