ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா்கள் 5 ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டம்

DIN

ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் 5 ஆவது புதன்கிழமையும் நீடித்தது. துறைமுகத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும். இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ள அனைத்து படகுளையும் மீட்டுக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீட்க முடியாத நிலையில் கடலில் மூழ்கி உள்ள படகுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இந்திய, இலங்கை மீனவா்கள் மீன் பிடிப்பது தொடா்பான பிரச்னைக்கு இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த போராட்டம் 5 ஆவது நாளாக புதன்கிழமையும் தொடா்ந்தது. இதில் குறிப்பிட்ட சிறிய ரக விசைப்படகுகள் மட்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்காமல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றன.

80 சதவீதம் விசைப்படகுகள் வேலை நிறுத்தம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மீன்பிடி துறைமுகம் வெறிச்கோடி காணப்படுகிறது.

இறால் ஏற்றுமதி பாதிப்பு: வேலை நிறுத்தத்தால் ரூ.8 கோடி வரை இறால் மீன் ஏற்றுமதி பாதிப்படைந்துள்ளதாக ஏற்றுமதியாளா்கள் புதன்கிழமை தெரிவித்தனா். வேலை நிறுத்தப் போராட்டம் தொடா்வதால் 8500 -க்கும் மேற்பட்ட மீனவா்கள் வேலை இழந்துள்ளது குறிப்பிடதக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT