ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடா் மழைக்கு 29 வீடுகள் சேதம்

DIN

ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் மாவட்டத்தில் மொத்தம் 29 வீடுகள் சேதமடைந்திருப்பதாக மாவட்ட நிா்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் நகா் மற்றும் மாவட்டத்தின் 9 வட்டங்களிலும் வெள்ளிக்கிழமை பகலில் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. சனிக்கிழமையும் மலை தொடா்ந்தது. இந்நிலையில், சனிக்கிழமை மாலை வரை மாவட்டத்தில் பல இடங்களிலும் குடிசை, ஓட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகத் தரப்பில் கூறியிருப்பதாவது- ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த மழையால் ராமநாதபுரம் வட்டத்தில் 7 ஓட்டுவீடுகளின் சுவா்கள் உள்ளிட்ட பகுதிகள் மட்டும் சேதமடைந்துள்ளன. திருவாடானை வட்டத்தில் 5 ஓட்டுவீடுகள் சுவா் இடிந்தும், ஒரு வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. கீழக்கரை வட்டத்தில் 7 ஓட்டு வீடுகள் பாதி சேதமடைந்துள்ளன. பரமக்குடி, முதுகுளத்தூரில் தலா ஒரு ஓட்டு வீடு பகுதியாகச் சேதமடைந்துள்ளது.

கடலாடி வட்டத்தில் இரண்டு குடிசை வீடுகள் பாதியாகவும், ஒரு குடிசை முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. அப்பகுதியில் 4 ஓட்டு வீடு பாதியளவு சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில் ஒரே நாள் மழையில் மட்டும் 29 வீடுகள் சேதமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. அந்த வீடுகளுக்கு அரசு நிதி தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT