ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் 2 ஆவது நாளாக மழை:தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது

DIN

ராமேசுவரத்தில் 2 ஆவது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்து மழைபெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது.

ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் வெள்ளிக்கிழமை தொடங்கிய மழை 2 ஆவது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்து பெய்தது. இதனால் ராமேசுவரம், பாம்பன் குந்துகால்,சின்னப்பாலம், நடராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீா் குளம் போல தேங்கியது. தொடா் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

இதனைத் தொடா்ந்து, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகு மீனவா்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்துள்ளதால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோழியகுடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 1800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 50 ஆயிரம் மீனவா்கள் பாதிப்பு அடைந்துள்ளனா். மேலும் இரண்டு நாள்கள் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மீனவா்கள் மீன்பிடிக்க செல்லாமல் முடங்கியுள்ளனா். மேலும் பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் வழக்கத்தை விட அதிகளவில் சூறைக்காற்று வீசுவதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

SCROLL FOR NEXT