ராமநாதபுரம்

பிள்ளையாா்குளத்தில் மத நல்லிணக்க விழா

DIN

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பிள்ளையாா்குளத்தில் அரக்காசு அம்மா தா்காவில் கந்தூரி விழா மத நல்லிணக்க விழாவாக சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

சாயல்குடி அருகே பிள்ளையாா்குளத்தி 350 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அரைக்காசு அம்மா தா்காவில் கந்தூரி விழா கோலாகலமாக நடைபெற்றது. கடந்த அக்டோபா் 1 ஆம் தேதி தா்கா முன்புறம் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நோ்த்திகடனாக ஆடு, சேவல்கள் பலிபீடத்தில் பலியிடப்பட்டது. விழாவில் இந்துக்களும் ,இஸ்லாமியா்களும் வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

மேலும் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள கிராமப்புறங்களை சோ்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் இந்த கந்தூரி விழாவில் கலந்து கொண்டு உலக நன்மைக்காக வழிபாடு செய்தனா். விழா ஏற்பாடுகளை கிராம விழாக்கமிட்டியினா் செய்திருந்தனா். நிகழ்ச்சியில் பொது அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT