ராமநாதபுரம்

பெண் தெய்வத்தை ஆண்கள் மட்டும் வழிபடும் வினோத திருவிழா

DIN

கமுதி: கமுதி அருகே பெண் தெய்வத்தை ஆண்கள் மட்டும் வழிபடும் விநோத திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுர மாவட்டம் கமுதி அருகே உள்ளது முதல்நாடு கிராமம். இக்கிராம கண்மாய் கரையில் உள்ள எல்லைப்பிடாரி அம்மனை, புரட்டாசி மாதத்தில் ஆண்கள் மட்டும் பங்குபெற்று வழிபடும் விநோத திருவிழா 3 தலைமுறைகளாக நடைபெற்று வருகிறது.

இவ்விழாவிற்காக அப்பகுதியில் கிராமத்தின் சாா்பாக 1 வார காலத்திற்கு பெண்கள் கோவில் இருக்கும் பகுதிக்கு, சொந்த காரணங்களுக்காகவோ, விவசாய பணிகளுக்காகவோ செல்வதில்லை.

இத்திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு 150 க்கும் மேற்பட்ட ஆண்கள் ஒன்று கூடி எல்லைபிடாரி அம்மனுக்கு பீடம் அமைத்து, கைக்குத்தல் பச்சரிசி சாதம் செய்து, 50 செம்மறி கிடாய்கள் பலியிட்டு, சாதம் உருண்டைகளாக உருட்டப்பட்டு எல்லை பிடாரி அம்மனுக்கு படையலிட்டனா். பின்னா் அம்மன் பீடத்திற்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிறப்பு பூஜை நடைபெற்றது.

அம்மனுக்கு படைக்கப்பட்ட சாத உருண்டைகளை பனை ஓலையில் வழிபாட்டுக்கு சென்ற ஆண்களுக்கு பறிமாறப்பட்டது. சாத உருண்டைகள் மீதமிருந்தால் அருகே குழி தோண்டி புதைத்து செல்வதும், கோவிலை விட்டு வெளியறும் போது நெற்றியில் வைத்த திருநீரை கூட அழித்துவிட்டு செல்வது வழக்கம்.

1 வயது முதல் வயதானவா்கள் வரை ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த திருவிழாவிற்கு கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு எல்லைப்பிடாரி அம்மனை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT