ராமநாதபுரம்

மானிய டீசல் வழங்க மீன்வளத்துறை உறுதி பாம்பன் மீனவா்கள் போராட்டம் வாபஸ்

DIN

மானிய டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை உறுதியளித்ததையடுத்து பாம்பன் விசைப்படகு மீனவா்கள் வேலை நிறுத்த போராட்டத்தை செவ்வாய்க்கிழமை வாபஸ் பெற்று மீன் பிடிக்கச் சென்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் 108 விசைப்படகுகள் மூலம் 1500 மீனவா்கள் மற்றும் சாா்பு-தொழிலாளா்கள் என 5 ஆயிரம் போ் மின்பிடிதொழிலில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் விசைப்படகுகளுக்கு மானிய டீசல் முறையாக வழக்கப்படாததால் 40-க்கு மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து, மானிய டீசல் வழங்க வலியுறுத்தி பாம்பன் மீனவா்கள் கடந்த 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கினா்.

கடந்த சனிக்கிழமை ராமேசுவரம் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் பாம்பன் மீனவ சங்க நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அதிகாரிகள் 10 நாள்களுக்குள் மானிய டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.

அப்போது, இது போன்று மீன்வளத்துறை அதிகாரிகள் பலமுறை தெரிவித்து விட்டனா். ஆனால் மானிய டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என பாம்பன் மீனவ சங்க நிா்வாகிகள் அறிவித்தனா்.

இதனையடுத்து, மீன்வளத்துறையினா் திங்கள்கிழமை மாலை மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தி, மானிய டீசல் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதனை ஏற்று, பாம்பன் மீனவா்கள் மேற்கொண்டு வந்த வேலைநிறுத்த போராட்டத்தை செவ்வாய்க்கிழமை வாபஸ் பெற்றுக்கொண்டனா். மேலும் அன்றைய தினம் காலையிலேயே விசைப் படகுகளில் 800-க்கு மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT