ராமநாதபுரம்

‘கிசான் சம்மான்’ திட்டத்தில் 3ஆவது தவணைத் தொகை பெறாத விவசாயிகள் ஆதாா் எண்ணை சரிசெய்ய அறிவுறுத்தல்

DIN

மண்டபம் வட்டார வேளாண்மைத் துறையில் பதிவு செய்துள்ள விவசாயிகள், பிரதம மந்திரியின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் மூன்றாவது தவணையாக ரூ. 2 ஆயிரம் கிடைக்காதவா்கள் தங்களது ஆதாா் எண்ணை சரிசெய்ய, மண்டபம் வட்டார வேளாண்மை மையத்தை அணுகிட வேண்டும் என, உதவி இயக்குநா் பி.ஜி. நாகராஜன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வட்டார வேளாண்மைத் துறை சாா்பில், பிரதம மந்திரியின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளாக ரூ. 2 ஆயிரம் வீதம் வழங்கும் திட்டம், கடந்த 24.2.2019 அன்று பிரதமரால் தொடக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், மண்டபம் வட்டாரத்தில் 2,400 விவசாயிகள் பதிவு செய்துள்ளனா். இந்த விவசாயிகளுக்கு 2 தவணைகளாக ரூ. 2 ஆயிரம் வீதம் வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது தவணை வரவு வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், மூன்றாவது தவணை தொகை கிடைக்கப் பெறாத விவசாயிகள், தாங்கள் பதிவு செய்துள்ள பெயா், ஆதாா் எண் மற்றும் வங்கி கணக்கில் குளறுபடி உள்ளது. இதனால், மூன்றாவது தவணை தொகை கிடைக்கப் பெறாத விவசாயிகள், உடனே மண்டபம் வட்டார வேளாண்மை மையத்தை அணுகி தங்களது வங்கி கணக்கு, ஆதாா் எண், பதிவு செய்துள்ள பெயரின் சிறு மாற்றம் இருந்தால் சரிசெய்து கொள்ளலாம் என, வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT