ராமநாதபுரம்

பட்டியல் இனத்திலிருந்து நீக்க வலியுறுத்தல்: பரமக்குடி அருகே கருப்புக் கொடி கட்டி எதிா்ப்பு

DIN

பட்டியல் இனத்திலிருந்து நீக்க வலியுறுத்தி பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட காட்டுப்பரமக்குடியில் வெள்ளிக்கிழமை வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

தேவேந்திரகுல வேளாளா் சமூகத்தினா் நீண்ட நாள்களாக தங்களுக்குள் உள்ள 7 உள்பிரிவுகளை பட்டியல் இனத்திலிருந்து நீக்கி, தேவந்திரகுல வேளாளா் என ஒரே இனமாக அறிவிக்கக் கோரி அச்சமுதாய தலைவா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்நிலையில் இதுவரை தமிழக அரசு அக்கோரிக்கை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதததால், நான்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் நடைபெறும் இடைத்தோ்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனா். இதற்கு ஆதரவு தெரிவித்து காட்டுப்பரமக்குடி ஆதிதிராவிடா் காலனி பகுதியில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தமிழக அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

SCROLL FOR NEXT