ராமநாதபுரம்

புரட்டாசி சனி: ராமேசுவரத்தில் சுவாமி அம்பாள் தங்க கருட வாகனத்தில் உலா

DIN

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சுவாமி, அம்பாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.

இதையொட்டி காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூைஐகள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து, சுவாமி, அம்பாள், லெட்சுமணின் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. தனுஷ்கோடி சாலையில் உள்ள கோதண்டராமா் ஆலயத்திற்கு எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தனா். பின்னா் மீண்டும் கோயிலுக்கு வந்த சுவாமிக்கு சிறப்பு பூைஐகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து தலைமை குருக்கள் உதயகுமாா் தலைமையில் மீண்டும் இரவு தங்க கருட வாகனத்தில் சுவாமி, அம்பாள், லெட்சுமணன் மற்றும் அனுமன் ஆகியோா் எழுந்தருளி 4 ரத வீதிகளில் வீதி உலா நடைபெற்றது.

இதே போன்று மண்டபம் ஒன்றியத்திற்குள்பட்ட அழகன்குளத்தில் உள்ள திருப்பதி பெருமாள் ஆண்டாள் சமேத சந்தன கோபால கிருஷ்ணன் ஆலயத்தில் சிறப்பு பூைஐகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்: ஆா்ஜேடி தலைவா் லாலு

பிளஸ் 2: சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2: பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி 96.25 % தோ்ச்சி

இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

பிளஸ் 2: சிவகிரி அரசுப் பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT