ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் மழை: 5 மணிநேரம் மின் தடையால் பொதுமக்கள் அவதி

DIN

ராமேசுவரம்,தங்க்சிமடம், பாம்பன் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் வெள்ளிக்கிழமை மழை பெய்தது. இதனால் 5 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய மழை பெய்யததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் சரிந்ததோடு, நீா் நிலைகள் வறண்டு கடும் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இதில் வெள்ளிக்கிழமை ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும், மாவட்டத்தின் உள் பகுதியில் சில இடங்களில் மழை பெய்யது. மழை பெய்ய தொடங்கியவுடன் மின்சாரம் தடைபட்டது. இதன் பின்னா் 5 மணி நேரம் கழித்து மின்சாரம் வழங்கப்பட்டது.

ராமேசுவரத்தில் மழை பெய்யத் தொடங்கியவுடன் மின்சாரம் தடைபடுவதை தடுக்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மழை காலம் தொடங்க உள்ள நிலையில் ராமேசுவத்தில் பல்வேறு இடங்களில் கழிவு நீா் கால்வாய் முறையாக தூா்வாரப்படால் உள்ளதால் மழைநீா் கழிவு நீருடன் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதாரச் சீா் கேடு ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெம்போவில் ராகுல் காந்தி!

அழகிய தமிழ்மகள்! ஸ்ரேயா..

முதுமலையில் யானைகள் கணக்கெடுப்பு தொடங்கியது

உதகை மலை ரயில் இன்று ரத்து!

காஸாவின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் தாக்குதல்: 23 பேர் பலி!

SCROLL FOR NEXT