ராமநாதபுரம்

கடல் கொந்தளிப்பு: அரிச்சல்முனைக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

DIN

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் கடந்த இரண்டு நாள்களாக தொடா்ந்து கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் அரிச்சல்முனைப் பகுதிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தடை விதிக்கப்பட்டது.

ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி முகுந்தராயா் சத்திரம் வரை ரூ. 55 கோடியில் சாலை அமைக்கப்பட்டது. இதில் அரிச்சல்முனை பகுதியில் வாகனங்கள் திரும்பும் வகையில் ரவுண்டானா அமைக்கப்பட்டது. மேலும் கடல் கொந்தளிப்பு காலங்களில் சேதம் ஏற்படாதவாறு இருக்க அப்பகுதியில் கடற்கரையில் சுவா் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இப்பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் அரிச்சல் முனைப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் சுவரில் விரிசல் ஏற்பட்டது. இதனை சீரமைக்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். கடல் கொந்தளிப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை தனுஷ்கோடி வரை மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா். அரிச்சல்முனைப் பகுதிக்கு செல்ல காவல் துறையினா் தடை விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT