ராமநாதபுரம்

திருவாடானை பகுதிவிவசாயிகளுக்கு உழவு மானியம்: வேளாண் அதிகாரி தகவல்

DIN


தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், திருவாடானை பகுதி விவசாயிகளுக்கு உழவு மானியம் வழங்கப்பட உள்ளதாக, வேளாண்மை உதவி இயக்குநர் கருப்பையா தெரிவித்துள்ளார்.
      இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை மேலும் தெரிவித்ததாவது:  திருவாடானை வட்டாரத்தில், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 2019-2020 ஆம் ஆண்டில் உழவு மானியம் 6,500 ஹெக்டேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே, 30-9-2019-க்குள் விதைப்புப் பணி முடித்த விவசாயிகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் உழவு மானியத் திட்டமானது பதிவு செய்யப்படும்.
இதற்கு தேவையான ஆவணங்களான 10(1) நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், புகைப்படம் ஆகியன கொண்டு வரவேண்டும் எனத் தெரிவித்தார். 
திருவாடானை வட்டார வேளாண்மை அலுவலர் வீரக்குமார் தெரிவித்ததாவது: பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 18 வயது முதல் 40 வயது வரை உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் பதிவு செய்யலாம் எனவும், இத் திட்டத்தில் இணைய ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு நகல் போன்ற ஆவணங்கள் மட்டுமே தேவைப்படும். 
தற்போது, இத்திட்டத்தில் இணைந்த 18 வயது முதல் 40 வயது வரையிலானஅமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாத வருமானம் ரூ.15 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கக்கூடாது. இதன் சிறப்பம்சமாக 60 வயதுக்கு பிறகு மாதம் ரூ.3000 கிடைக்கும். 
 மேலும், கணவர் இறக்கும்பட்சத்தில் மனைவிக்கு ரூ.1200 மாதந்தோறும் ஓய்வூதியமாகக் கிடைக்கும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திட்டத்தில் தொடர வாய்ப்பில்லை எனில், செலுத்திய தொகை வட்டியுடன் திருப்பிக் கொடுக்கப்படும். 
எனவே, இத் திட்டத்தில் அனைவரும் சேர்ந்து பயன்பெறுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படி தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT