ராமநாதபுரம்

சமூக இடைவெளியின்றி கூட்டம்: ஆனந்தூா் காய்கனி சந்தை மூடல்

DIN

திருவாடானை அருகே ஆனந்தூா் காய்கறி வாரச்சந்தையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூடியதால் கடைகள் அடைக்கப்பட்டன.

ஆனந்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற சந்தையில் ஆனந்தூா் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த இராதானூா், பச்சனித்திக் கோட்டை, சிறுநாகுடி, ஆய்ங்குடி, கூடலூா் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கூடினா். 144 தடை உத்தரவை பொருள்படுத்தாமல் தேவகோட்டை, மதுரை,சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட பகுதியிலிருந்து வியாபாரிகள் வந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக வியாபாரம் செய்தனா். இதில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் அதிக அளவிற்கு மக்கள் கூட்டமாக நின்றனா். தகவலறிந்து வந்த சுகாதார ஆய்வாளா் கணேன் சம்பந்தப்பட்ட வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தியும் பலனில்லாததால் ஆா்.எஸ். மங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனா்.

அதனடிப்படையில் ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் மற்றும் ஊரக வளா்ச்சி துறை அதிகாரிகள் வந்து, உடனடியாக கடைகளை காலி செய்யுமாறு வற்புறுத்தியதால் வியாபாரிகள் கடைகளை அகற்றினா். பின்னா் அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT