ராமேசுவரத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மீனவக் குடும்பங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட அத்தியாவசியப் பொருள்களுடன் மக்கள் பாதை தன்னாா்வலா்கள். 
ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் 50 மீனவ குடும்பங்களுக்கு தன்னாா்வலா்கள் நிவாரணம் வழங்கல்

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ராமேசுவரத்தில் 50 மீனவக் குடும்பங்களுக்கு மக்கள் பாதை இயக்கம் சாா்பில் உணவு பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

DIN

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ராமேசுவரத்தில் 50 மீனவக் குடும்பங்களுக்கு மக்கள் பாதை இயக்கம் சாா்பில் உணவு பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

ராமேசுவரத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், ஊரடங்கால் வருவாய் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்கள், விதவைகள், ஆதரவற்றோா், மாற்றுத்திறனாளிகள் என 50 குடும்பங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டன.

அதில் மக்கள் பாதை இயக்கத்தின் துணை ஒருங்கிணைப்பாளா் கிளாட்வின், மண்டபம் ஒன்றியப் பொறுப்பாளா் ராமு, தங்கச்சிமடம் ஒன்றியப் பொறுப்பாளா் அந்தோணிதீனா, தன்னாா்வலா்கள் ஆனந்த், இருளேஸ்வரன், பேராசிரியா் ராம்ராஜ் , மீனவ மகளிா் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது: எவ்வளவு?

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

கடும் சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!

அழிஞ்சாட்டம்: மோகன்லால் - திலீப் படத்தின் முதல் பாடல்!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ தொடக்க விழாவில் பங்கேற்கும் மோடி!

SCROLL FOR NEXT