ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் திடீர் மழையால் சாலையில் கரைபுரண்டோடிய நீர்

ராமநாதபுரம் நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலையில் திடீரென மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் கரைபுரண்டோடியது.

ஜெயப்பாண்டி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலையில் திடீரென மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் கரைபுரண்டோடியது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயில் தாக்கத்தைக்குறைக்கும் வகையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. புதன்,

வியாழக்கிழமைகளில் மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை பெய்யவில்லை. இந்தநிலையில், வெள்ளிக்கிழமை காலையில் வெயில் கொளுத்தியது. மாலையில் திடீரென வானம் கருமேகத்துடன் காணப்பட்டன.

மேகத்துடன் காணப்பட்ட நிலையில் ராமநாதபுரம் நகர் மற்றும் அதைச்சுற்றிய ஊரகப் பகுதிகளில் மழை பெய்தது. அப்போது காற்றும் வீசியது. மழையால் ராமநாதபுரம் நகரில் வழக்கம் போல சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் குளம் போல தேங்கிநின்றன. மழையால் ராமநாதபுரத்தில் குளிர்ந்த சூழல் காணப்பட்டது.மழையால் குடிநீர் பிரச்னை எழாது என பொதுமக்களும், விவசாயத்துக்கு மழை உதவும் என விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT