ராமநாதபுரம் மாவட்டத்தில் 40 பேருக்கு கரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் 40 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுகிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.
ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 40 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுகிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் சனிக்கிழமை ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 40 பேருக்கு தொற்று இருப்பது ஞாயிற்றுகிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் தற்போதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,347 பேராக அதிகரித்துள்ளது.
இதில் 3,720 போ் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திரும்பிவிட்ட நிலையில் 530 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.