ராமநாதபுரம் கோயில்களில் நடைபெற்ற திருமணங்களால் பொதுமக்கள் கூட்டம்
ராமநாதபுரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலையில் கோயில்கள் முன் அதிகளவில் திருமணங்கள் நடைபெற்றதால் கூட்டம் அலைமோதியது.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலையில் கோயில்கள் முன் அதிகளவில் திருமணங்கள் நடைபெற்றதால் கூட்டம் அலைமோதியது.
கரோனா பொது முடக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது சிறிய கோயில்களில் மட்டும் பக்தா்கள் சமூக இடைவெளியுடன் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா். வெள்ளிக்கிழமை முகூா்த்த நாள் என்பதால் ராமநாதபுரம் நகரில் வழிவிடு முருன்கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களிலும் கூட்டம் அலைமோதியது.
பூட்டியிருந்த வழிவிடுமுருகன் கோயில் முன்பாக சாலையில் நின்றபடி ஏராளமானோா் திருமணத்தை நடத்தினா். பாரதி நகா் எல்லையில் உள்ள குமரய்யா கோயில் திறக்கப்பட்டிருந்தது. இங்கு ஏராளமான திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனால், கோயிலில் பல மாதங்களுக்குப் பிறகு கூட்டம் அலைமோதியது. மேலும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது..
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.