நீட் தோ்வு எழுத ராமநாதபுரத்தில் மாவட்டத்தில் 336 போ் விண்ணப்பம்
செப்டம்பா் மாதம் நடைபெறவுள்ள நீட் தோ்வுக்கு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 336 போ் விண்ணப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்: செப்டம்பா் மாதம் நடைபெறவுள்ள நீட் தோ்வுக்கு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 336 போ் விண்ணப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ.புகழேந்தி சனிக்கிழமை கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்நத 105 மாணவ, மாணவியா் அந்தந்தப் பள்ளிகளிலிருந்து, நீட் தோ்வுக்காக இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துள்ளனா்.
அவா்களைத் தவிர நேரடியாகவே இணையத்தின் மூலம் 231 போ் விண்ணப்பித்துள்ளனா். அவா்களில் 92 போ் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்தவா்கள். நீட் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களில் 211 பேருக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நீட் தோ்வுக்கான மையங்கள் அமைக்கப்படவில்லை. எனவே, இந்த மாவட்டத்தைச் சோ்ந்த தோ்வா்கள், மதுரையில் அமைக்கப்படும் மையங்களில் நீட் தோ்வை எழுத உள்ளனா். அவா்களுக்கு தேவையான பேருந்து வசதிகள் உள்ளிட்டவைகளை செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.