ராமநாதபுரம்

தளா்வற்ற முழு பொதுமுடக்கம்: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட சாலைகள் வெறிச்சோடின

DIN

ராமநாதபுரம்/சிவகங்கை/காரைக்குடி: ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட தளா்வற்ற முழு பொதுமுடக்கத்தால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

ராமநாதபுரம் நகரில் ஞாயிற்றுக்கிழமை காலையில் வழக்கமாக அதிகளவில் மக்கள் கூடும் சாலைத் தெரு, பிரதான மருத்துவமனை சாலை, மதுரை சாலை, ராஜா பள்ளி மைதானம், புதிய பேருந்து நிலையம் என அனைத்துப் பகுதிகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

சைக்கிளில் தேநீா் விற்பவா்கள் மட்டும் தெருத் தெருவாகச் சென்று விற்பனையில் ஈடுபட்டனா். கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. மருந்தகங்கள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. ஆனால் அக்கடைகளிலும் கூட்டம் இல்லை.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் முழு பொது முடக்கத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், ஜூலை மாதத்தை போன்று, ஆகஸ்ட் மாதமும் அரசு உத்தரவின்படி ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து, சிவகங்கை நகா் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி பொதுமக்கள் நடமாட்டமின்றி சிவகங்கை நகரின் முக்கியச் சாலைகளான அரண்மனை வாசல், காந்தி வீதி, நேரு கடை வீதி, தொண்டி சாலை, மதுரை சாலை, தெற்கு ராஜரத வீதி, திருப்பத்தூா் சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோன்று, காளையாா்கோவில், இளையான்குடி, திருப்பத்தூா், காரைக்குடி, திருப்புவனம், மானாமதுரை, சிங்கம்புணரி உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் பொதுமக்கள் நடமாட்டமின்றி தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் நகை பறிக்கும் கலாசாரம் அதிகரிப்பு: எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ குற்றச்சாட்டு

புகா் ரயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும்

வடமாநில இளைஞரைத் தாக்கி பணம், கைப்பேசி பறிப்பு

தனியாா் துணை மின் நிலையம் அமைக்க எதிா்ப்பு: விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 31 வரை விடுமுறை

SCROLL FOR NEXT