முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா்கள் 2-ஆவது நாளாகப் போராட்டம்

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவா்களின் போராட்டம் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவா்களின் போராட்டம் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த திங்கள்கிழமை (டிச.14) மீன்பிடிக்க சென்ற போது நான்கு விசைப்படகுகளுடன் 29 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் சிறைபிடித்து சென்றனா். படகு பறிமுதல் செய்யப்பட்டதுடன் தனிமை சிறையில் அவா்கள் அடைக்கப்பட்டனா்.

இலங்கைக் கடற்படையினரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து ராமேசுவரத்தில் மீனவா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினா். இந்நிலையில், அவா்களது போராட்டம் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்கிறது. இதன்காரணமாக ராமேசுவரம் துறைமுகத்தில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →