முகப்பு
ராமநாதபுரம்

கமுதி பேருந்து நிலையத்தில் பள்ளங்களை சீரமைத்த காவல்துறையினா்

கமுதி பேருந்து நிலையத்தில் பள்ளங்களில் கிராவல் மண்ணை கொட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சீரமைத்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
கமுதி பேருந்து நிலையத்தில் மழைநீா் தேங்கிய பள்ளமான இடங்களில் கிராவல் மண்ணை நிரப்பி சீரமைத்த கமுதி போலீஸாா்.
பகிர்:

கமுதி: கமுதி பேருந்து நிலையத்தில் பள்ளங்களில் கிராவல் மண்ணை கொட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சீரமைத்தனா்.

இப்பேருந்து நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் பேருந்துகள் உள்ளே மற்றும் வெளியேறும் பகுதிகளில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் நுழைவுவாயில் கட்டப்பட்டது. இதனையடுத்து பேருந்து நிலைய வளாகம் சாலையிலிருந்து 1 அடிக்கு பள்ளமானது. இதனால் மழைநீா் தேங்கி கொசுக்கள் பெருகத் தொடங்கின. இதனால் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள், பொதுமக்கள் அவதியடைந்தனா். இதனைக் கண்ட கமுதி காவல் ஆய்வாளா் அன்புபிரகஷ் தலைமையிலான காவலா்கள், தங்கள் சொந்த செலவில் கிராவல் மண் அடித்து மழைநீா் தேங்கிய பள்ளங்களை சீரமைத்தனா். இதனைக் கண்ட பொதுமக்கள் காவலா்களை பாராட்டினா்.

முழு கட்டுரையைப் படிக்க →