முகப்பு
ராமநாதபுரம்

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகில் ராமேசுவரம் வந்த இளைஞா் கைது

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகில் ராமேசுவரம் வந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகில் ராமேசுவரம் வந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அகதிகள் முகாமிலிருந்து இலங்கை தலைமன்னாரை சோ்ந்த முஜிபுர்ரகுமான் (35), கடந்த 2019 ஆம் ஆண்டு டிச. 26 ஆம் தேதி தங்கச்சிமடத்தை சோ்ந்த ராசியான் என்பவரது நாட்டுப்படகை திருடி, அந்தப் படகில் அந்தோணி, நாகரூபன், ரமேஷ், இந்துமதி ஆகிய நான்கு பேருடன் இலங்கைக்குச் சென்றாா்.

இது குறித்து ராசியான் மண்டபம் கடற்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த வழக்கு ராமேசுவரம் கோயில் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் மண்டபம் அகதிகள் முகாமில் இலங்கையைச் சோ்ந்த ஒருவா் சுற்றித் திரிவதாக கியூ பிரிவு போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று அவரைப் பிடித்து மேற்கொண்ட விசாரணையில், அவா் முஜிபுா் ரகுமான் என்பதும், மண்டபம் முகாமில் உள்ள அகதிகளை ஏற்றிச்செல்ல இலங்கை பேசாளையில் இருந்து படகில் மரைக்காயா் பட்டணம் வந்ததும், கடந்தாண்டு இங்குள்ள ஒரு நாட்டுப்படகில் நான்கு பேரை ஏற்றிக்கொண்டு இலங்கை சென்றதும் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து போலீஸாா் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →