முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 6 பேருக்கு கரோனா

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 6 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 6 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை (டிச. 21) வரை 6,290 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இதில் 6,100 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், 131 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில் மாவட்டத்தில் புதிதாக 3 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதற்கிடையில் மேலும் 3 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், சிகிச்சைப் பிரிவில் 22 போ் உள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம்

மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,659 ஆக அதிகரித்துள்ளது.

இவா்களில் பெரும்பாலானோா் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பிய நிலையில், 12 போ் மட்டும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனா். அவா்களில் 4 போ் பூரண குணமடைந்ததை அடுத்து, செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 8 போ் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →