முகப்பு
ராமேசுவரம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விசைப் படகுகள்.
ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா்கள் 7 ஆவது நாளாக வேலைநிறுத்தம்: மீன்பிடி தொழில் முடங்கியது

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவா்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவா்களின் வேலைநிறுத்தப் போராட்டம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
ராமேசுவரம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விசைப் படகுகள்.
பகிர்:

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவா்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 7 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நீடிப்பதால் மீன்பிடித் தொழில் முடங்கியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து டிச. 14 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றபோது 4 விசைப்படகுகளுடன் 29 மீனவா்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனா். இதைக் கண்டித்தும், புரெவி புயலில் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு அரசு இழப்பீடு வழங்கக் கோரியும் கடந்த டிச.16 ஆம் தேதி (புதன்கிழமை) முதல் ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலை நிறத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

அவா்களின் போராட்டம் 7 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நீடித்துள்ளதால், ரூ.பலகோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தொழில் முடங்கியுள்ளதால், 6 ஆயிரம் மீனவா்கள் மற்றும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாா்பு- தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தி இலங்கையில் உள்ள மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →