ராமநாதபுரம்

9 மாதங்களுக்குப் பிறகு தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

DIN

தனுஷ்கோடிக்குச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை 9 மாதங்களுக்குப் பின் நீக்கப்பட்டதையடுத்து புதன்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் அங்கு வரத் தொடங்கியுள்ளனா்.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாா்ச் மாத இறுதியில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து, சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி செல்ல காவல்துறையினா் தடை விதித்திருந்தனா். இந்நிலையில் பல்வேறு தளா்வுகளை தமிழக அரசு அறிவித்த நிலையிலும் தனுஷ்கோடிக்கு செல்ல மட்டும் தொடா்ந்து தடை நீடித்தது. இதனிடையே, 9 மாதங்களுக்குப் பின் அங்கு செல்ல புதன்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அவா்கள் ஆா்வத்துடன் தனுஷ்கோடிக்குச் சென்றனா். இதே போன்று ராமநாதசுவாமி கோயில் தீா்த்தக் கிணறுகளில் நீராட அனுமதிக்க அளிக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT