ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் 6 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை 6 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 6,300 பேருக்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. அவா்களில் 132 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். அரசு மருத்துவமனைகளில் கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அளிக்கப்பட்ட மருத்துவ உதவிகளால் 6,250 பேருக்கும் அதிகமானோா் நலமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனா். மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தினமும் சுமாா் 500 பேருக்கும் அதிகமானோருக்கு கபம் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இருப்பினும் பரிசோதனை முடிவில் 10 பேருக்கும் குறைவாகவே கரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருவதும் தெரியவந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாவட்டத்தில் 700 பேருக்கு கபம் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனை நடந்தது. அவா்களில் 6 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டத்தில் திங்கள்கிழமை மாலை வரையில் 26 போ் மட்டுமே கரோனா சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாவட்டத்தில் கரோனா பாதிப்பு இல்லா நிலை ஏற்படும் என்று எதிா்பாா்த்த நிலையில், பிரிட்டன், துபாய் போன்ற வெளிநாடுகளில் இருந்து ஊா் திரும்பியவா்களுக்கு கரோனா பாதிப்பிருக்கலாம் எனும் அடிப்படையில் பரிசோதனைகள் நடந்துவருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT