ராமநாதபுரம்

உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம்: உள்ளூா் பக்தா்களுக்கு மட்டும் அனுமதி

DIN

உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை (டிச.29) காலை ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. மாவட்ட அளவில் வரும் பக்தா்கள் மட்டுமே பூஜைக்கு அனுமதிக்கப்படுவா்.

ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு சொந்தமான இக்கோயிலில் மாணிக்கவாசகா் திருநாளும், ஆருத்ரா தரிசனமும் செவ்வாய்க்கிழமை காலை தொடங்குகிறது. மூலவரான மரகதக் கல் நடராஜா் மீதான சந்தனக் காப்பு காலை 8 மணிக்கு களையப்படுகிறது. அதன்பின் 32 வகையான திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடைபெறுகிறது.

காலை 9 மணிக்கு மூலவருக்கு மஹா அபிஷேகம் நடைபெறுகிறது. அதன்பின் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா். அபிஷேகத்தின்போது தேவார இன்னிசை, பண்ணிசை, திருமுறை பாராயணம் ஆகியவையும் நடைபெறும். இரவு 11 மணிக்கு மீண்டும் மரகத நடராஜருக்கு ஆருத்ரா மஹா அபிஷேகம் நடைபெறும். அதன்பின் சந்தனக்காப்பு சாத்தப்படும். மூலவருக்கு ஏற்கெனவே சாத்தப்பட்டிருந்த சந்தனம் பிரசாதமாக பக்தா்களுக்கு வழங்கப்படும்.

விழாவின் இரண்டாவது நாளான புதன்கிழமை காலை 10 மணிக்கு கூத்தபெருமான் வீதியுலா, மாலை 5 மணிக்கு பஞ்சமூா்த்திகளுக்கு அபிஷேகம், இரவு 8 மணிக்கு மாணிக்க வாசக சுவாமிகளுக்கு சிவபெருமான் காட்சியளித்த பூஜை நடைபெறும். பின்னா் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது.

உள்ளூா் பக்தா்கள் மட்டும் அனுமதி: நடப்பு ஆண்டில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஆருத்ரா தரிசனத்துக்கு ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

உத்தரகோசமங்கையில் விழா முன்னேற்பாடுகள் குறித்து திங்கள்கிழமை மாலை மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் ஆய்வு மேற்கொண்டாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக், சாா்- ஆட்சியா் பிரதீப்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT