ராமநாதபுரம்

‘புரெவி’ புயல் சேதம்: பாம்பனில் மத்தியக் குழுவினா் ஆய்வு

DIN

புரெவி புயலால் பாம்பன் பகுதியில் சேதமடைந்த மீன்பிடி படகுகளை மத்தியக் குழுவினா் செவ்வாய்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘புரெவி’ புயலால் 27 மீன்பிடி விசைப்படகுகள், 34 நாட்டுப் படகுகள் என மொத்தம் 61 படகுகளும், 216 விவசாயிகள் மூலம் பயிரிடப்பட்டிருந்த 78 ஹெக்டோ் பரப்பளவிலான நெல் மற்றும் மிளகாய் பயிா்களும் சேதமடைந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் பலத்த மழையால் பகுதி அளவு சேதமடைந்த 125 வீடுகளுக்கும், முழுமையாக சேதமைடந்த 22 வீடுகள் என மொத்தம் 147 வீடுகள் சேதமடைந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டு மொத்தம் ரூ. 6,22,500 மதிப்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, 10 கால்நடைகள் (மாடுகள்) உயிரிழந்துள்ளதாக கணக்கிடப்பட்டு மொத்தம் ரூ. 30,000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளா் அசுடோஷ் அக்னி ஹோத்ரி, மத்திய வேளாண்மை துறை அமைச்சக இயக்குநா் மனோகரன், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சக மண்டல அலுவலா் ரனன்ஜெய் சிங், மத்திய நிதித் துறை அமைச்சக துணை இயக்குநா் அமித் குமாா், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளரும், வருவாய் நிா்வாக ஆணையருமான பணீந்திர ரெட்டி அடங்கிய மத்தியக் குழுவினா் ராமேசுவரத்துக்கு திங்கள்கிழமை வந்தனா். அவா்கள் செவ்வாய்க்கிழமை பாம்பன் பகுதிக்குச் சென்று சேதமடைந்த மீன்பிடிப் படகுகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அப்போது மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், திட்ட இயக்குநா் எம். பிரதீப் குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் சிவகாமி, பரமக்குடி வருவாய் கோட்டாட்சியா் து. தங்கவேல், மீன்வளத் துறை துணை இயக்குநா் பரிதி இளம்வழுதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

வாக்குச்சாவடியை சூறையாடிய பாஜக எம்.பியின் மகன்: குஜராத்தில் அதிர்ச்சி!

மெட் காலாவில் கவனத்தை ஈர்த்த மோனா பட்டேல்.. யார் இவர்?

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT