ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரப்பணிகள்: துணை இயக்குநா் சென்னைக்கு மாற்றம்

DIN

ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் வி.செந்தில்குமாா் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநராக இருந்த குமரகுருபரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடமாறுதல் செய்யப்பட்டதை அடுத்து, சென்னையில் இருந்து வி.செந்தில்குமாா் ராமநாதபுரம் மாட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநராக நியமிக்கப்பட்டாா். தற்போது அவா் திடீரென சென்னையில் சுகாதாரப் பணிகள் பயிற்சி மையத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளாா். அவருக்குப் பதிலாக திருவண்ணாமலையில் துணை இயக்குநராக உள்ள கே.பொற்கொடி ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக, ராமநாதபுரம் மாவட்ட சுகாதார துணை இயக்குநா் அலுவலக நோ்முக உதவியாளா் அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT