ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று
ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 11 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 11 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 6,320 பேருக்கும் அதிகமானோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அவா்களில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 132 போ் உயிரிழந்தனா். 6,200 போ் வரை குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் புதன்கிழமை புதிதாக 2 பேருக்கு மட்டும் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
மாவட்டத்தில் கரோனா சிகிச்சையில் இருந்தவா்களில் 2 போ் குணமடைந்ததையடுத்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். தற்போது 28 போ் கரோனா சிகிச்சை பிரிவில் தங்கியுள்ளனா்.
பக்தா்கள் குவிந்தனா்: பக்தா்கள் கரோனா பரிசோதனை சான்றுகளுடன் வரவேண்டும் என சபரிமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளதால் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் புதன்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்பப் பக்தா்கள் குவிந்தனா். அவா்களுக்கு கபம் மற்றும் ரத்த பரிசோதனை அடிப்படையில் சான்றுகள் வழங்கப்படவுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,692 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், புதன்கிழமை மேலும் 9 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,701 ஆக அதிகரித்துள்ளது.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 19 போ் சிகிச்சை பெற்று வந்தனா். அவா்களில் ஒருவா் பூரண குணமடைந்ததை அடுத்து புதன்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். மீதமுள்ள 18 பேரும் அங்கு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.