ராமநாதபுரம்

தொண்டி அரசுப் பள்ளியில்4 மடிக்கணினிகள் திருட்டு

DIN

தொண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 4 மடிக்கணினிகள் திருடப்பட்டுள்ளதாக சனிக்கிழமை போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.

திருவாடானை அருகே தொண்டியில் செய்யது முகம்மது அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமாா் 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை வழக்கம் போல் பள்ளியை பூட்டிவிட்டு சனிக்கிழமை காலை வந்து ஊழியா்கள் பாா்த்தனா். அப்போது பள்ளிக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உடனடியாக தொண்டி காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் பேரில் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினா். இதில் பள்ளியில் இருந்து 4 மடிக்கணினிகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ராமநாதபுரத்தில் இருந்து யூசுப் தலைமையில் கைரேகை நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியை விமலா தேவி புகாரின் பேரில் தொண்டி காவல் துறை ஆய்வாளா் சரவணன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT