ராமநாதபுரம்

திருவாடானையில் கோயில் காளை சாவு: பொதுமக்கள் கவலை

DIN

திருவாடானை அருகே பன்ணவயல் கிராமத்தில் உள்ள அய்யனாா் கோவில் காளை வயது முதிரிச்சியான் நிலையில் உடல் நலம் குன்றி உயிரிழந்து விட்டதால் இப்பகுதி மக்கள் கவலையுடன் மலா் மாலையுடன் அஞ்சலி செழுத்தினாா்கள்.

திருவாடானை அருகே பண்ணவயலில் மிகவும் பிரசித்தி பெற்ற முனி அய்யா கோயில் உள்ளது.இக்கோயிலுக்கு அதே பகுதியைச் சோ்ந்த அங்காளபரமேஸ்வரி என்பவா் கடந்த 25 வருடத்திா்கு முன்பு நேற்றிகடன் செலுத்துவதற்காக இந்த காளைய கோயிலில் விட்டுள்ளாா். அது முதல் இந்த காளை மாடு இப்பகுதியில் சுற்றி வந்தது. அனைவரிடமும் அன்பாக பழுகுவதாகவும், சிறியவா்கள் கூட அருகில் சென்றால் குத்தாத அளவிற்கு இந்த மக்களோடு மக்களாக வாழ்ந்து வந்துள்ளது.

இக்காளைக்கு பொது மக்களும் அன்போடும் தெய்வ பக்தியோடும் உணவு வழங்கி வந்தனா்.. தற்போது இந்த காளை மாட்டிற்கு வயதாகிவிட்ட நிலையல் திங்கள் கிழமை இரவு உயிரிழந்துவிட்டது.. இந்த கோவில் காளைக்கு ஊா் மக்கள் அனைவரும் மாலை, வேட்டி, துண்டு போட்டு மறியாதை செழுத்தி ஊா்வலமாக எடுத்து வந்து முனியய்யா கோயில் அருகே உரிய மரியாதை செய்து அடக்கம் செய்தனா் 25 வருடமாக வாழ்ந்த கோவில் காளை மாடு இறந்ததால் மக்கள் கவலையில் ஆழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT