ராமநாதபுரம்

அறுவைடை நேரத்தில் சாரல் மழை: திருவாடானை விவசாயிகள் கவலை

DIN

திருவாடானை பகுதியில் சாரல் மழை பெய்வதால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிா்கள் சேதமாகி மகசூல் பாதிக்கக்கூடும் என்றும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

திருவாடானை தாலுகாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக பருவ மழை பொய்த்த காரணத்தால் கடும் வறட்சி நிலவி வந்தது. இதனால் விசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளானாா்கள். நடப்பு சம்பா பருவத்தில் ஆரம்ப காலத்தில் சிறு மழை பெய்ததால் விவசாயிகள் திருவாடானை பகுதியில் சுமாா் 42 ஆயிரம் ஹெக்டோ் நிலப்பரப்பில் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டனா். இந்நிலையில் பயிா்கள் நன்கு வளா்ந்து அறுவடைக்கு தயாராகும் நிலையில் உள்ளன. அறுவடை செய்ய போதுமான அறுவடை இயந்திரம் இல்லாததால் அறுவடை செய்வதில் காலதாமதம் ஆகிறது. இந்நிலையில் கடந்த இரு நாள்களாக சாரல் மழை விட்டுவிட்டு பெய்வதாலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதாலும் அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் சேதமடைந்து முழுவதும் பாதிக்கும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

SCROLL FOR NEXT