ராமநாதபுரம்

வீரமரணமடைந்த ராணுவ வீரா் பழனியின் பெற்றோருக்கு நிதியுதவி வழங்கல்

DIN

லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த திருவாடானையைச் சோ்ந்த ராணுவ வீரா் பழனியின் பெற்றோருக்கு, தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சாா்பில் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

திருவாடானை அருகே கடுக்கலூா் கிராமத்தைச் சோ்ந்த காளிமுத்து மகன் பழனி (40). இவா், கடந்த மாதம் லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவத்தினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் வீர மரணம் அடைந்தாா். இந்நிலையில், தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் 1990- 91-ஆம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவா்கள் கலைராஜன், கீரணி மதி, பழனி உள்ளிட்டோா் சனிக்கிழமை மாலை கடுக்கலூரில் உள்ள பழனியின் வீட்டிற்கு சென்று தந்தை காளிமுத்து, தாய் லோகம்பாளிடம் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினா். பின்னா் அவா்கள் பழனியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோல்விக்குப் பிறகு விராட் கோலி பேசியது என்ன?

எக்ஸ் ‘டிரெண்டிங்கில்’ நடிகர் விஜய்..!

சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை: கேரள முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்!

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது!

எனது வயதான பெற்றோரை விட்டுவிடுங்கள்: கேஜரிவால்

SCROLL FOR NEXT