முகப்பு
ராமநாதபுரம்

ஆடி அமாவாசை: பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் 

கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை ராமேசுவரம், தேவிபட்டணம், சேதுக்கரை கடலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் நீராட மாவட்ட நிர்வாகம் தடை, காவல்துறையினர்

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
பகிர்:

கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை ராமேசுவரம், தேவிபட்டணம், சேதுக்கரை கடலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் நீராட மாவட்ட நிர்வாகம் தடை, காவல்துறையினர் தடுப்பு வேலி அமைத்து பக்தர்களை அனுமதிக்கவில்லை. 

இதனால் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி திங்கட்கிழமை கானப்பட்டது.  இந்துக்கள் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு அமாவாசை நாட்களில் புனித ஸ்தலங்களில் கடலில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம். இதில், மாதந்தோறும் வரும் அமாவசை மற்றும் முக்கிய ஆடிஅமாவாசை நாளில் ராமேசுவரம்,தேவிபட்டணம்,சேதுக்கரை உள்ளிட்ட பகுதிக்கு ஒரு லட்சத்திற்கு மேல் பக்தர்கள் கடலில் நீராடி வழிபாடு நடத்துவது வழக்கம். 

இந்நிலையில், நாட்டில் கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திங்கட்கிழமை இன்று ஆடிஅமாவாசையை முன்னிட்டு கரோனா நோய் பரவலை தடுக்கும் விதமாக ராமேசுவரம்,தேவிபட்டணம்,சேதுக்கரை உள்ளிட்ட பகுதிக்கு பக்தர்கள் சென்று நீராட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் வெளிமாவட்டம்,மற்றும் உள் மாவட்டத்தில் இருந்து யாரும் இந்த பகுதிக்கு வரக்கூடாது என்றும் மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. 

இந்த உத்தரவை மீறி வரும் வாகனங்கள் மீது,அந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையா அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் யாரும் நீராட வரவேண்டாம். ஆண்டு தோறும் நடைபெரும் ராமர்,சீதை தீர்த்த வாரி நிகழ்ச்சி இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்குள் பக்தர்கள் யாரும் செல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராமேசுவரம் பக்தர்கள் யாருக்கும் திதி கொடுக்க மாட்டோம் என புரோகிதர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

ராமேசுவரம்,தேவிபட்டணம்,சேதுக்கரை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து நீராட ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் வர காவல்துறையினர் அனுமதிக்கவில்லை, மேலும் மாவட்டம் முழவதிலும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எக்காரணம் கொண்டும் பக்தர்க்ள நீராட அனுமதி முடியாது என காவல்;துறை அதிகாரி ஒருவர் திங்கட்கிழமை தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →