முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானையில் விவசாய சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருவாடானையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாய சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 29 ஜூலை, 2020 at 11:27 PM
திருவாடானை தாலுகா அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாய சங்கத்தினா்.
பகிர்:

திருவாடானை: திருவாடானையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாய சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் தாலுகா குழு உறுப்பினா் நாகநாதன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் குறிப்பிட்ட நபா்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுவதாகவும், வேலை அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை வழங்கக் கோரியும், ஊதியத்தை குறைக்காமல் முழு ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

Advertisement

இதில் சங்கத்தின் செயலாளா் அருள், பொருளாளா் மனோகரன் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் முத்துராமன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.