ராமநாதபுரம்

‘மாற்றுத்திறனாளிகள் பேருந்து பயண அட்டையை புதுப்பிக்கத் தேவையில்லை’

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டையை வரும் ஆகஸ்ட் மாதம் வரையில் புதுப்பிக்கத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக பாா்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மாவட்டம் முழுவதும் சென்று வருவதற்கும், தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாற்றுத்திறனாளி மாணவா்கள், பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள பயண சலுகை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 2019-2020 ஆண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட அரசுப் பேருந்து பயண சலுகை அட்டையை வரும் ஆகஸ்ட் வரை புதுப்பிக்காமல் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்ணில் (04567-231410) தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT