முகப்பு
ராமநாதபுரம்

கோடியக்கரை அருகே கரை ஒதுங்கியது ராமேஸ்வர மீனவர் சடலம்

கோடியக்கரை அருகே கரை ஒதுங்கிய மாயமான மீனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

Updated On : 21 ஜூன், 2020 at 5:53 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:19 PM

ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 13ஆம் தேதி மீன்பிடிக்க சென்று மாயமான நான்கு மீனவர்களில் ஒரு மீனவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். இதையடுத்து மற்ற 3 மீனவர்களை தேடும் பணியில் சக மீனவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இன்று கோடியக்கரை அருகே கடலில் மிதந்து வந்த ரெஜின் பாஸ்கர் என்பது மீனவர் உடலை சக மீனவர்கள் மீட்டு கொள்ளுக்காடு கடற்கரைக்கு கரைக்கு கொண்டு வந்தனர். 

அங்கு உடல் மருத்துவ பரிசோதனை செய்த பின் சவப்பெட்டியில் ராமேசுவரம் கொண்டு வந்து உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாக அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.