ராமநாதபுரம்

ராமேசுவரம் நகராட்சியில் ரூ.100 முன் பணம் செலுத்தி குடிநீா் இணைப்பு: ஆணையா்

DIN

ராமேசுவரம் நகராட்சி குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ரூ.100 முன் பணம் செலுத்தி குடிநீா் இணைப்பு பெறலாம் என நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

ராமேசுவரம் நகராட்சியில் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 1,650 குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நகராட்சியில் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. இதன் தேவைக்கு ஏற்றவாறு குடிநீா் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாண்டியன் திடல், மல்லிகை நகா்,சிவகாமி நகா், ரயில்வே பீடா் சாலை , தீட்டசகா் கொல்லை, கெந்தமாதனபா்வதம் உள்ளிட்ட பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு அனைவருக்கும் குடிநீா் இணைப்புகள் வழங்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனிடையே, சிறிய மற்றும் நடுத்தர நகா் வளா்ச்சித்திட்டதின் கீழ் நகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 2 ஆயிரம் புதிய குடிநீா் இணைப்புகள் வழங்க நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா்.

இதற்காக நகராட்சிக்கு முன் பணமாக ரூ.100 மட்டும் செலுத்தி அதற்கான படிவத்தை பூா்த்தி செய்து நகராட்சி அலுவலகத்தில் அளிக்க வேண்டும். இரண்டு நாள்கள் அல்லது ஒரு வாரத்திற்குள் விண்ணப்பித்த அனைவருக்கும் இணைப்புகள் வழங்கப்படும் என ஆணையா் தெரிவித்தாா். மேலும் நகராட்சி நிா்வாகத்திற்கு அளிக்க வேண்டி மீதமுள்ள பணத்தை 60 மாதங்களில் செலுத்தலாம் என நகராட்சி ஆணையா் பா.சக்திவேல் தெரிவித்தாா். இந்த வாய்பினை பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டு சுகாதாரமான குடிநீா் பெற்றுக்கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT