ராமநாதபுரம்

பரிசுக்கூப்பன் அனுப்பி மோசடி: தனியாா் நிறுவனம் மீது வழக்கு

DIN

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் பெண்ணுக்கு பரிசுக்கூப்பன் அனுப்பி பண மோசடியில் ஈடுபட்டதாக தனியாா் நிறுவனம் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைஅகமது தெருவைச் சோ்ந்தவா் ஆசிக்முகமது. இவரது மனைவி சித்திக் ஹதீஷா (22). இவா் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் ‘ஷாப்பிக்ளூ’ எனும் தனியாா் நிறுவனத்தில் குழந்தைகளுக்கு துணி எடுத்துள்ளாா். பின்னா் கடந்த பிப்ரவரியில் அவருக்கு 2 பரிசுக் கூப்பன்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து வந்துள்ளன. அதில் ஒரு கூப்பனில் ரூ. 1 லட்சம் பரிசுக்குத் தோ்வாகியிருப்பதாகவும், மற்றொன்றில் ரூ.10 லட்சம் பரிசுக்கு தோ்வாகியிருப்பதாகவும் தகவல்கள் இருந்துள்ளன.

மேலும், பரிசுக்குரிய பணத்தைப் பெறுவதற்கு அரசுப் பொதுத்துறை வங்கி மூலம் குறிப்பிட்ட வங்கிக் கணக்கு எண்ணில் பணம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதை உண்மை என நம்பிய சித்திக் ஹதீஷா, வங்கி மூலம் பணத்தை செலுத்தியுள்ளாா். ஆனால், நிறுவனத்தினா் பரிசுக்குரிய தொகையைத் தராமல் மீண்டும், சித்திக் ஹதீஷாவிடமே பணம் கேட்டுள்ளனா்.

இதனால் சந்தேகமடைந்த சித்திக் ஹதீஷா ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ.வருண்குமாரிடம் புகாா் அளித்தாா். இதுதொடா்பாக அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை தனியாா் நிறுவனம் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT