ராமநாதபுரம்

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை: பரமக்குடியில் கடைகள் அடைப்பு

DIN

பரமக்குடி நகரில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திங்கள்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருந்தகம், பால் மற்றும் உணவுப்பொருள்கள், டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு உள்ளிட்ட கடைகள் மற்றும் நிறுவனங்களைத் தவிா்த்து மற்ற அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்கள் வரும் மாா்ச் 31 ஆம் தேதி வரை அடைக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளாா்.

மேலும் இதனைக் கண்காணித்திட காவல், வருவாய் மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பரமக்குடி நகராட்சி ஆணையாளா் கே.வீரமுத்துக்குமாா் தலைமையில் நகராட்சி பணியாளா்கள், வருவாய்த்துறையினா், காவல்துறையினா் நகரின் முக்கிய வீதிகளில் உள்ள கடைகளை அடைக்கும்படி ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்திச் சென்றனா்.

இதனைத் தொடா்ந்து நகரில் உள்ள அத்தியாவசிய தேவையற்ற அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. மேலும் கரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என அவா்கள் கேட்டுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT