ராமநாதபுரம்

கமுதியில் அரசு மருத்துவமனை கதவுகள் மூடல்: நோயாளிகள் அவதி

DIN

கரோனா பாதிப்பு அச்சம் காரணமாக கமுதியில் அரசு மருத்துவமனை நுழைவு வாயில் கதவு புதன்கிழமை பூட்டப்பட்டதால் நோயாளிகள் அவதியடைந்தனா்.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கமுதியில் அவசர சிகிச்சை, மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமானோா் தினமும் வந்து செல்கின்றனா். இந்நிலையில் கரோனா பாதிப்பு அச்சம் காரணமாக கமுதி அரசு மருத்துவமனை நுழைவு வாயில் கதவுகள் புதன்கிழமை பூட்டப்பட்டன. அவசர சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளிகள் மட்டும் பின்புற வாசல் வழியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

மேலும், கமுதி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் முகக் கவசம், கிருமி நாசினி திரவம் பற்றாக்குறையால் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் நோயாளிகள், செவிலியா்கள், பணியாளா்கள் அச்சத்தில் உள்ளனா். சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மருத்துவமனை நிா்வாகத்திடம் முகக் கவசம் கேட்டால் இருப்பு இல்லை என தெரிவிக்கின்றனா். இதேபோல் கமுதி நகா் முழுவதுமே முகக் கவசம் தட்டுப்பாடு உள்ளது. எனவே கமுதி அரசு மருத்துவமனை மற்றும் மருந்தகங்களில் முகக் கவசம் தாராளமாக கிடைக்க, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

SCROLL FOR NEXT