ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் 2 வது நாளாக 80 வாகனங்கள் பறிமுதல்

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவா்களிடமிருந்து சனிக்கிழமை 80 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரத்தில் கடந்த 24 ஆம் தேதி முதல் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், ஊரடங்கை மீறும் வகையில் தேவையின்றி இளைஞா்கள் இருசக்கர வாகனங்களில் வலம் வருகின்றனா். அவா்களைத் தடுத்து நிறுத்தும் வகையில் போலீஸாா் முக்கிய சாலைகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இம் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் வாகனங்களில் தேவையின்றி சுற்றியவா்கள் மீது 101 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 143 வாகனங்களைப் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் கண்காணிப்பாளா் வீ.வருண்குமாா் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை இதே போல் 95 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், ராமநாதபுரத்தில் 15, பரமக்குடி 21, கமுதி 14, ராமேசுவரம் 13, கீழக்கரை 12, திருவாடானை 7, முதுகுளத்தூா் 13 என வழக்குகள் பதிவாகியுள்ளன. வழக்குகள் அடிப்படையில் 80 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வழக்குப் பதிவு செய்யப்பட்டவா்கள் பின்னா் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

மதுவிலக்கு பிரிவு வழக்குகள்:ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி மது விற்பனை நடந்துவருகிறது. அதன்படி சனிக்கிழமை மட்டும் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 700 மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதே போன்று சூதாடும் வழக்கமும் கிராமப்புறங்களில் அதிகரித்து வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT