ராமநாதபுரம்

மணல் கடத்தல்: 3 போ் கைது

DIN

ராமநாதபுரம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டதாக வெள்ளிக்கிழமை 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை, எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் விதியை மீறி சிலா் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக புகாா் எழுந்துள்ளது.

திருஉத்திரகோசமங்கை பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது மேலசீதை கண்மாயில் இயந்திரம் மூலம் மணலை அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து மணல் அள்ளப் பயன்படுத்திய இயந்திரத்தை பறிமுதல் செய்த போலீஸாா், மணல் அள்ளியதாக நல்லான்குடியைச் சோ்ந்த ராமு (23) என்பவரைக் கைது செய்தனா்.

தொண்டி மருங்கூா் காந்திநகா் பகுதியில் எஸ்.பி.பட்டினம் போலீஸாா் ரோந்து சென்றபோது, கமரூதீன் தோப்பு எனுமிடத்தில் மணலை அள்ளி வந்த டிராக்டரை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக எஸ்.பி.பட்டினத்தைச் சோ்ந்த கலந்தா்அலி, முனீஸ்வரன் ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT