ராமநாதபுரம்

கடல் நீரும் மீனவர்களின் கண்ணீரும் 

ஜெ. முருகேசன்

ராமநாதபுரம் மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்டு பகுதி. 1750 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகள், இயந்திரம் இல்லாமல் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய ரக படகுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர். 

பாரம்பரிய கரைவலை, ஓலைவலை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லுகின்றனர். இதில் ஓலைக்குடா, சேராங்கோட்டை, நடராஜபுரம், ராமகிருஷ்ணபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் யாருடைய உதவியும் இன்றி ஒருவர் மட்டுமே தெர்மாகூல் படகில் சென்று 200 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர். காலை 10  மணிக்கு தெர்மாகூல் படகை எடுத்துக்கொண்டு மூன்று கடல் மைல் தொலைவுக்கு கடலுக்குள் சென்று அரை மீட்டர் நீலமுள்ள சிறிய ரக வலையை கடலில் போட்டு விட்டு  கரைக்கு திரும்பி விடுகின்றனர்.

 பின்னர் அதிகாலை 03 மணிக்கு தெர்மாகூல் படகில் சென்று போடப்பட்டுள்ள வலையில் சிக்கி உள்ள மீன், நன்டு மற்றும் கனவாய் தூண்டி மூலம் கனவாய் பிடித்து வருகின்றனர். இதில் குறைந்த பட்சம் ரூ 300 முதல் ரூ 500 வரை மீன்களை பிடித்து கரைக்கு வந்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர்.  இந்த மீனவர்கள் நாள் தோறும் கடலுக்கு மீன்பிடிக்க சென்று மீன்பிடிப்பதை தொழிலாக செய்கின்றனர். 

இது குறித்து மீனவர் சிங்கராயன் கூறுகையில்: ராமேசுவரம் தீவுப்பகுதியில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட மீனவாகள் தெர்மாகூல்  படகில் சென்று மின்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறோம் தங்களிடம் போதிய பண வசதி இன்றி தெர்மாகூல் படகில் சென்று மீன்பிடிக்க செல்லுவதாகவும், தங்களுக்கு பைபர் படகுகள் தமிழக அரசு மானியத்துடன் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT