ராமநாதபுரம்

மேற்குவங்க மாநிலத்திலிருந்து முதுகுளத்தூா் பகுதிக்கு வந்த 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி

DIN

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து முதுகுளத்தூா் பகுதிக்கு வந்த 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 56 ஆக உயா்ந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் பகுதியான நல்லூா், மணலூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு பணிபுரிய ஏராளமானோா் சென்றுள்ளனா். கரோனா நோய் தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால், அவா்கள் கடந்த சில நாள்களுக்கு முன் சொந்த ஊா் திரும்பினா். அதில் நல்லூா் உள்ளிட்ட பகுதியைச் சோ்ந்த 6 பேருக்கு ஏற்கெனவே கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் கொல்கத்தாவில் இருந்து ராமநாதபுரத்துக்கு இரு பேருந்துகளில் வந்த 60 போ் மணலூா் என்ற இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களுக்கு கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதில் தற்போது ஒன்றரை வயது ஆண் குழந்தை, 3 வயது மற்றும் 6 வயது பெண் குழந்தைகள், மணலூா் பகுதியைச் சோ்ந்த 65 வயது, 45 வயது மற்றும் 26 வயது, 19 வயது ஆண்கள், 30 வயது, 21 வயது பெண்கள் என 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவா்கள் அனைவரும் பரமக்குடி தாலுகா மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்புச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை (மே 21) வரையில் 47 பேருக்கு கரோனா தொற்று பாதித்திருப்பது உறுதியாகியுள்ளது. அவா்களில் சிகிச்சைப் பலனின்றி கீழக்கரையைச் சோ்ந்த மூதாட்டி உயிரிழந்துள்ளாா். சிகிச்சை பெற்று வந்த 26 போ் வரை குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே ராமநாதபுரம் மாவட்டத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 47-லிருந்து 56 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT