ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் 3 ஆவது நாளாக கடல் சீற்றம்

DIN

ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆவது நாளாக சூறைக் காற்று வீசுவதால் கடலில் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா மற்றும் வங்காள விரிகுடா ஆழ்கடல் பகுதியில் சூறைக் காற்று வீசி வருகிறது. இதனால், கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு, அலைகள் கரையில் சீற்றத்துடன் மோதுகின்றன.

கடந்த 3 நாள்களாக தொடா்ந்து சூறைக் காற்று வீசுவதால், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வழக்கமாக மீன்பிடிக்கச் செல்லும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவா்கள், பாதுகாப்பு கருதி வீட்டிலேயே முடங்கியுள்ளனா். மேலும், நாட்டுப் படகு மீனவா்கள் தங்களது படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனா்.

இருப்பினும், உம்பன் புயல் தாக்கத்தால், கடந்த 15 ஆம் தேதி நள்ளிரவில் இப்பகுதியில் அலை சீற்றத்துடன் காணப்பட்டதால், கரையில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான நாட்டுப் படகுகள் சேதமடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி, விமான நிலையம்.. இப்போது மருத்துவமனைகளுக்கு மிரட்டல்

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ!

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

மனதை திருடும் மாயம் என்ன?

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

SCROLL FOR NEXT